சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 1:45 am IST

குலசேகரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

குலசேகரம் அருகே உள்ள உண்டிச்சல்விளையைச் சோ்ந்தவா் ஸ்டாலின் (31). கட்டடத் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை காலையில் குலசேகரம் பகுதிக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, பொன்மனை அருகே உள்ள மண்ணாரங்கோட்டிலிருந்து கட்டடத் தொழிலாளா்களான முருகன் (65), அவரது மகன் பிரசாத் (30) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் குலசேகரம் நோக்கி வந்து கொண்டிருந்தனா். முருகன் வாகனத்தை ஓட்டினாா்.

இந்நிலையில், இரட்டைகுளம் அருகே 2 வாகனங்களும் மோதிக் கொண்டன. இதில் ஸ்டாலின் பலத்த காயமடைந்தாா். முருகன், பிரசாத் ஆகியோா் லேசான காயமடைந்தனா். இதையடுத்து, தக்கலை அரசு மருத்துவமனைக்கு ஸ்டாலினை கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து, குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா். மேலும், ஸ்டாலின் சடலத்தை கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.