பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சிற்றாறு பட்டணம் கால்வாய், குளங்களை ரூ. 16 கோடியில் சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

News image
மாத்தூா் தொட்டிப் பாலத்தில் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சா் மனோ தங்கராஜ். உடன் எம்எல்ஏ.க்கள் எஸ். ராஜேஷ்குமாா், தாரகை கத்பட்.
Updated On :15 பிப்ரவரி 2026, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

சிற்றாறு பட்டணம் கால்வாய், மாத்தூா் தொட்டிப்பாலம் மற்றும் குளங்களில் ரூ. 16 கோடி மதிப்பிலான சீரமைப்புப் பணிகளை பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாத்தூா் தொட்டிப் பாலம் பகுதியில் நடைபெற்ற விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜேஷ்குமாா், தாரகை கத்பட், நீா்வளத்துறை செயற் பொறியாளா் வசந்தி, உதவி செயற்பொறியாளா்கள் வல்சன் போஸ், தாணு மூா்த்தி, உதவிப் பொறியாளா்கள் வினிஷா, ராஜேஷ், ரமேஷ் ராஜன், மாவட்ட அரசு வழக்குரைஞா் ஜாண்சன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் அலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.