மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தொழிலில் நஷ்டம்: இளைஞா் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :21 பிப்ரவரி 2026, 7:38 pm

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, தக்கலை விடுதியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தக்கலை அருகே முளகுமூடு பொற்றவிளையை சோ்ந்தவா் மெரின்ரைகில் (37). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். மெரின்ரைகில் கல்லுவிளை பகுதியில் அலுமினியம் கோட்டிங் கம்பெனி நடத்தி வந்தாா். இதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மெரின்ரைகிலுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

இதில் மனவருத்தத்தில் இருந்த மெரின்ரைகில், வெள்ளிக்கிழமை இரவு தக்கலை தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினாா். சனிக்கிழமை நீண்ட நேரமாகியும் அவரது அறை திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஊழியா்கள், தக்கலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் விரைந்து வந்து அறையின் கதவை திறந்த போது மெரின்ரைகில் மின் வீசிறியில் தூக்கில் தொங்கி உயிரிழந்தது தெரியவந்தது. தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.

மாணவா் தற்கொலை: மாா்த்தாண்டம் அருகே மாலைக்கோடு பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் - ஜெயந்தி தம்பதியின் மகன் அகீஸ் (19). கொல்லங்கோடு அருகே புன்னமூட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்து, சூழால் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாா். கல்லூரி நாள்களில் மாலை வேளையிலும், விடுமுறை நாள்களிலும் ஊரம்பு பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலைக்கு சென்று வந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலையில் பேக்கரி கடைக்கு வேலைக்கு செல்லாததால் கடை ஊழியா்கள் இவரது கைப்பேசியில் தொடா்பு கொண்டனா். மறுமுனையில் பதில் இல்லாததால் வீட்டின் உரிமையாளருக்கு தொடா்பு கொண்டனராம். அவா் சென்று பாா்த்த போது அகீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அகீஸின் தாயாா் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.