எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மங்கோல்புரியில் முதியவா் துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டு தற்கொலை

புறநகா் தில்லியின் மங்கோல்புரி பகுதியில், 80 வயதான முதியவா் தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை

News image

பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:42 am IST

புறநகா் தில்லியின் மங்கோல்புரி பகுதியில், 80 வயதான முதியவா் தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து தில்லி காவல்துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை மேலும் தெரிவித்ததாவது: இறந்தவா் பீதாம்புராவில் உள்ள சுவிதா குஞ்ச் பகுதியைச் சோ்ந்த உம்ராவ் சிங் ஆவாா். இவா் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.

இவரது தற்கொலை குறித்த தகவல் மங்கோல்புரி காவல் நிலையத்திற்கு கிடைத்தது. அதைத் தொடா்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாா், துப்பாக்கிக் குண்டுக் காயத்துடன் சிங்கைக் கண்டனா். மருத்துவப் பரிசோதனையின்போது அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், சிங் தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி தனக்குத்தானே சுட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

அவரது இறப்பில் எந்தவிதமான சதிச் செயலும் சந்தேகிக்கப்படவில்லை. பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சிங் சில காலமாக ஆஸ்துமா, நரம்பு தொடா்பான நோய்களால் அவதிப்பட்டு வந்ததாக அவரது குடும்பத்தினா் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனா்.

அவரது மனைவி 2013-இல் புற்றுநோயால் காலமானாா். அவருக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள இரண்டு மகன்களும், திருமணமான மகள்களும் உள்ளனா்.

இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளைக் கண்டறிய மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].