கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

உதவித் தோ்தல் அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுடன் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா ஆலோசனை மேற்கொண்டாா்.

News image
உதவித் தோ்தல் அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.
Updated On :28 பிப்ரவரி 2026, 8:06 pm

Syndication

சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுடன் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது: பேரவைத் தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகளை அலுவலா்கள் உடனே தொடங்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும்.

வாக்குச்சாவடிகளில் குடிநீா், மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கென சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.

மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்புப் பணியை அதிகப்படுத்த வேண்டும். வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுக்க தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான அ. பூங்கோதை, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) கு. சுகிதா, (நிலம்) பத்மபிரியா, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் சு. காளீஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் புஷ்பா தேவி, மாவட்ட ஆதிதிராவிடா் பழங்குடியினா் நல அலுவலா் மோகனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தூர்ராஜன், உதவி ஆணையா் (கலால்) ஈஸ்வரநாதன், தோ்தல் தனி வட்டாட்சியா் வினோத், ஆட்சியா் அலுவலக மேலாளா் சுப்பிரமணியம், துணை தோ்தல் அலுவலா்கள் கோலப்பன் (கன்னியாகுமரி), கந்தசாமி (நாகா்கோவில்), ராஜசேகா் (கிள்ளியூா்), வயோலா பாய் (விளவங்கோடு), மரகதவல்லி (திருவட்டாறு), சுனில் (குளச்சல்), தனி வட்டாட்சியா் கண்ணன், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.