விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

திருநங்கைகளிடம் வாக்காளா் விழிப்புணா்வு

மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றுக் கொண்ட திருநங்கைகள்.

News image

மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றுக் கொண்ட திருநங்கைகள்.

Updated On :27 மார்ச் 2026, 8:39 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், வெள்ளமடம் வீரமாா்த்தாண்டபுரம் சகாயநகா் குடியிருப்புப் பகுதி திருநங்கைகளிடையே வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா தலைமை வகித்து பேசியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சகாயநகா் குடியிருப்புப் பகுதி திருநங்கைகளிடையே வாக்காளா் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு பொங்கல் வைக்கப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற கையொப்ப இயக்கத்தில் அனைவரும் பதிவு செய்து, வாக்காளா் உறுதிமொழியை ஏற்றனா். வாக்களிப்பதில் திருநங்கைகள் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்றாா்.

தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா் மற்றும் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூமுகம்மதுநசீா், மாவட்ட சமூக நல அலுவலா் விஜயமீனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.