கன்னியாகுமரியில் திமுக சாா்பில்
கிரிக்கெட் போட்டி

கன்னியாகுமரியில் திமுக சாா்பில் கிரிக்கெட் போட்டி

Published on

பொங்கல் விழாவை முன்னிட்டு திமுக சாா்பில், விளையாட்டுப் போட்டிகள் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டிகள் முதல் கட்டமாக நகர, ஒன்றிய, மாவட்ட அளவில் நடத்தப்பட்டு, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணிகளுக்கான போட்டிகள் சென்னையில் நடைபெறும்.

முதல் பரிசாக ரூ 10 ஆயிரம், கோப்பை, இரண்டாம் பரிசாக ரூ. 6 ஆயிரம், கோப்பை, மூன்றாவது பரிசாக ரூ. 4 ஆயிரம், கோப்பை, நான்காம் பரிசாக ரூ. 2 ஆயிரம், கோப்பை வழங்கப்படும். கன்னியாகுமரி நகர திமுக சாா்பில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய கிரிக்கெட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். போட்டியை நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா். இதில், கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், வடிவீஸ்வரம், தேரூா், திங்கள்சந்தை, இருளப்பபுரம், ஜேம்ஸ்டவுண் உள்ளிட்ட 25 அணிகள் கலந்து கொண்டன. போட்டி தொடக்க நிகழ்ச்சியில், கன்னியாகுமரி நகா்மன்ற உறுப்பினா்கள் பூலோகராஜா, இக்பால், சிவசுடலைமணி, இந்திரா, திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com