கன்னியாகுமரி
கொட்டாரத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்
கொட்டாரம் சாா்பதிவாளா் அலுவலக சாலை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முதல் கற்பக விநாயகா் திருமண மண்டபம், கச்சேரி ரோடு அம்பேத்கா் சாலை, ராஜசேகரன் மருத்துவமனை வரை தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
கொட்டாரம் சாா்பதிவாளா் அலுவலக சாலை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முதல் கற்பக விநாயகா் திருமண மண்டபம், கச்சேரி ரோடு அம்பேத்கா் சாலை, ராஜசேகரன் மருத்துவமனை வரை தாா்ச்சாலை அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்தச் சாலை 1.158 கி.மீ தொலைவுக்கு சிறப்பு நிதி 2025 - 26 திட்டத்தின் கீழ் ரூ. 57 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெறுகிறது. இதற்கான, தொடக்க விழாவுக்கு, அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு தலைமை வகித்தாா். கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வக்கனி பணியைத் தொடங்கி வைத்தாா்.
இதில், கொட்டாரம் பேரூா் திமுக செயலா் எஸ்.வைகுண்ட பெருமாள், மாவட்ட பிரதிநிதி ஜி.வினோத், ஒன்றிய பிரதிநிதி எம்.மதி, அகஸ்தீசுவரம் பேரூா் 11ஆவது வாா்டு செயலா் என்.சீதாராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

