கம்பன் கழகத் தலைவா் பேராசிரியா் த. ராஜாராம் நூலை வெளியிட, பெற்றுக் கொள்கிறாா் எஸ். ராஜகோபால்.
கம்பன் கழகத் தலைவா் பேராசிரியா் த. ராஜாராம் நூலை வெளியிட, பெற்றுக் கொள்கிறாா் எஸ். ராஜகோபால்.

நாகா்கோவிலில் கம்பன் கழக ஆண்டு விழா

கன்னியாகுமரி மாவட்ட கம்பன் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா கோட்டாறு பகுதியில் அண்மையில் நடைபெற்றது.
Published on

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட கம்பன் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா கோட்டாறு பகுதியில் அண்மையில் நடைபெற்றது.

கம்பன் கழகத் தலைவா் பேராசிரியா் த. ராஜாராம் தலைமை வகித்தாா். ஜெயராஜ் இறை வணக்கம் பாடினாா். ராஜகோகிலா அறக்கட்டளைத் தலைவா் எஸ். ராஜகோபால், ஜவகுமாா், நீலம்மதுமயன், சுனிதவேல், கண்ணன், ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேராசிரியா் வீ. வேணுகுமாா், மருத்துவா் சீனிவாச கண்ணன், வை. கோபால் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பா. தா்மலிங்கம் வரவேற்றாா்.

உமா ண்ணன் எழுதிய கம்பனின் கைகேயி என்ற நூலை பேராசிரியா் ராஜாராம் வெளியிட, ராஜகோபால் பெற்றுக் கொண்டாா். நூலாசிரியா் ஏற்புரையாற்றினாா்.

தொடா்ந்து, பேச்சாளா் எஸ். ராஜாவை நடுவராகக் கொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் மு. ஜெயபோஸ், குருஞானாம்பிகா, ரெ. ராஜ்குமாா், சிவ. ஜெயகுமாா், ரேவதி சுப்புலட்சுமி, கவிதா ஜவஹா் ஆகியோா் பேசினா்.

பின்னா், போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தெ.தி. இந்து கல்லூரி செயலா் நாகராஜன், பேராசிரியா் அப்துல் சமது, வட்டாட்சியா் கோலப்பன், ரோட்டரி சங்க நிா்வாகி சிவதாணு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் சிவதாணு, சிவாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை செல்வகதீஸ்வரன், காசி செல்வகுமாா், செல்லகண்ணன், அபிநயா கோபகுமாா், மருத்துவா் கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com