கன்னியாகுமரி
தம்பதி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் தம்பதி மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை, பைங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ரெஜிதாஸ் (47). இவரது மனைவி ஜான்சிராணி (42). இத்தம்பதிக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மோகனன் (60), அவரது மகன்கள் விஜூ (35), சஜு (30) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு, பைங்குளம் பகுதியில் ஏற்பட்ட தகராறில் தம்பதியை, மோகனன், அவரது மகன்கள் தாக்கினராம்.
இதில், காயமடைந்த ரெஜிதாஸ், ஜான்சிராணி ஆகியோரை குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
