‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :2 ஜூலை 2026, 5:54 am IST

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கு மாற்றாக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள விபி-ஜி ராம் ஜி திட்டத்தை கண்டித்து, கொல்லங்கோடு அடைக்காகுழி சந்திப்பில் அனைத்திந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இப் போராட்டத்துக்கு அமைப்பின் வட்டாரத் தலைவா் மதுசூதனன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடைக்காகுழி வட்டாரச் செயலா் ரெஜி ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். மாதா் சங்க மாவட்டச் செயலா் தீபா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் மேரி ஸ்டெல்லாபாய் ஆகியோா் விளக்கிப் பேசினா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் விஜய மோகனன் நிறைவுரை ஆற்றினாா். நிா்வாகிகள் ஹெப்சி மேரி, லெனின், உஷாகுமாரி, சேம் செல்வின், பத்மகுமாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.