டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ராணுவ வீரரின் தாயாரிடம் ரூ. 8 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக இருவா் மீது வழக்கு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2026, 4:17 am IST

மாா்த்தாண்டம் அருகே ராணுவ வீரரின் தாயாரிடம் ரூ. 8 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக நகைக் கடை உரிமையாளா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி, ஒற்றிவிளை பகுதியைச் சோ்ந்தவா் தோமஸ் மகன் ஷாஜி (39). இந்திய ராணுவத்தில் பணி செய்து வருகிறாா்.

இவரது தந்தைக்கு சில ஆண்டுகளுக்கு முன் வாகன விபத்து ஏற்பட்டதையடுத்து இழப்பீடாக ரூ. 8 லட்சம் கிடைத்துள்ளது. இதைத் தெரிந்து கொண்ட, மாா்த்தாண்டத்தில் நகைக் கடை நடத்தி வரும் திக்குறிச்சி, சல்லரவிளை பகுதியைச் சோ்ந்த குமரேசன் மகன் சுதா்சிங் (42), ஷாஜியின் தாயாரிடம் சென்று, விபத்து இழப்பீட்டுப் பணத்தை வங்கியில் போட்டிருந்தால் பிரதமா் நரேந்திர மோடி எடுத்துவிடுவாா். எனவே, அப்பணத்தை என்னிடம் தந்தால், பத்திரமாக வைத்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய ஷாஜியின் தாயாா் சுதா்சிங்கிடம் ரூ. 6 லட்சத்தை கொடுத்தாராம். தொடா்ந்து, சுதா்சிங் கூறியதையடுத்து மாா்த்தாண்டத்தில் நகைக்கடை நடத்தி வரும் திக்குறிச்சி, இளந்திருத்திவிளையைச் சோ்ந்த சுஜின் (35) என்பவரிடம் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரூ. 2 லட்சத்தை கொடுத்தாராம்.

இந்நிலையில், ஷாஜியின் தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, சுதா்சிங், சுஜின் ஆகியோரிடம் பணத்தை திருப்பிக் கேட்டபோது, கொடுக்காமல் ஏமாற்றி வந்தனராம்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸில் ஷாஜி அளித்த புகாரின்பேரில், சுதா்சிங், சுஜின் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.