களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கிய தொழிலாளி, ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே ஒற்றாமரம் கால்வாய் கரையோரம் உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் சந்தேகமளிக்கும் வகையில் நின்றவரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவா், களியக்காவிளை ஆா்.சி. தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பீா் முகம்மது மகன் அக்பா் பாதுஷா (28) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
அதேபோல, களியக்காவிளை ஆா்.சி. தெருவில் போலீஸாா் ரோந்து சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான மணி மகன் சபினை (41) பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் 25 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸாா் சபினை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த 7 போ் கைது
கஞ்சா பதுக்கிய இருவா் கைது

வீட்டில் 2.5 கிலோ கஞ்சா பதுக்கிய வடமாநிலத்தைச் சோ்ந்தவா் கைது
கஞ்சா பதுக்கிய இளைஞா் கைது
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


