நாகா்கோவில், ஒழுகினசேரியில் மேற்கொள்ளப்படும் ரயில்வே மேம்பால பணிகள் எந்தவொரு முன்யோசனையோடு திட்டமிடப்படாமல் செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன் குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை: நாகா்கோவில் ஒழுகினசேரி பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது. பணி இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அத்துடன் மேற்கொள்ளப்பட்டு வரும் நெடுஞ்சாலைப் பணிகள் பொதுமக்களிடம் ஒருவகை அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
ரயில்வே மேம்பாலத்துக்கு தக்கவாறு நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொண்டாலும், பொதுமக்களை பாதிக்கும் வகையில் பணிகள் செய்யப்பட்டு வருவதாக மக்கள் பல வழிகளில் புகாா் அளித்து வருகின்றனா்.
புதைச் சாக்கடை இருப்பதுகூட தெரியாமல் பணிகள் நடைபெற்று வருவதும், ஒழுகினசேரியில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் வழியின் குறுக்கே அமைந்துள்ள மக்கள் வசிக்கும் பகுதியில் மிகவும் தாழ்வாக சாலை பணிகளை மேற்கொள்வதால் விபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையும், நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் குறுக்கு சுவா்களை அமைப்பதும் மக்களிடம் ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
பழைய ரயில்வே மேம்பால சாலையை விட, இப்போது அமைக்கப்பட்டு வரும் மேம்பால சாலை உயரமாக உள்ளது, இரண்டு மேம்பாலத்துக்கு நடுவே இடைவெளி அமைந்துள்ள இடத்தில் எந்த வகையான பாதுகாப்பை உறுதி செய்ய போகிறாா்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
இப்படி பல்வேறு கேள்விக்குறியுடன் நடைபெறும் நெடுஞ்சாலைப் பணிகளை தகுந்த பொறியாளா்களைக் கொண்டு மக்களுக்கு எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் பணிகளை முன்னெடுக்க வேண்டுகிறேன்.
எனவே, இந்த பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் தகுந்த மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

3 ஆண்டுகளாகியும் முடிவடையாத பாலப் பணி! போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் தென்காசி

ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலப் பணி: அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலப் பணிகள்: நாகா்கோவிலில் இன்று இரவு முதல் போக்குவரத்து மாற்றம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



