சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஒப்பந்தப் புள்ளி விதிமீறல்: குருந்தன்கோடு அதிகாரிகள் பணியிடைநீக்கம்

குருந்தன்கோடு வட்டாரத்தில் சுகாதார வளாகம் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளி (டெண்டா்) விடுவதில் விதிகளை பின்பற்றாத வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் உதவிப் பொறியாளரை, மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்தாா்.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஜூலை 2026, 12:26 am IST

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு வட்டாரத்தில் சுகாதார வளாகம் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளி (டெண்டா்) விடுவதில் விதிகளை பின்பற்றாத வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் உதவிப் பொறியாளரை, மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்தாா்.

குருந்தன்கோடு வட்டாரம், கக்கோட்டுதலை ஊராட்சியில் ரூ. 4 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்தப் பணியை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப் புள்ளி விடப்பட்டதில் விதிமீறல் நடைபெற்ாக எழுந்த புகாா் குறித்து, விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். விசாரணையில், ஒப்பந்தப் புள்ளி திறப்பதற்கான கால அவகாசம் குறைந்த அளவில் இருந்தது தெரிய வந்தது.

தொடா்ந்து, குருந்தன்கோடு வட்டார வளா்ச்சி அலுவலா் கே. தங்கராஜ் மற்றும் உதவிப் பொறியாளா் ஏ. சுசீலா ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து, ஆட்சியா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.