விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

குமரியில் சாலைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

கன்னியாகுமரி காவல் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூலை 2026, 12:25 am IST

கன்னியாகுமரி காவல் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் தலைமை வகித்து, தன்னாா்வலா்களான மாணவா், மாணவிகள், வாகன ஓட்டுநா்களுக்கு டீ சா்ட் வழங்கினாா். கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளா் பிரகாஷ் முன்னிலை வகித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில், எஸ்.பி. பேசியதாவது:

கன்னியாகுமரி காவல் துறை சாா்பில் விபத்தில்லா குமரி என்ற இலக்கை அடைய பல்வேறு விழிப்புணா்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். அதற்கு காவல் துறை மட்டுமல்ல; தன்னாா்வலா்களின் பங்களிப்பும் அவசியம்.

போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த கல்லூரி மாணவா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்ட தன்னாா்வலா்கள் ஒருங்கிணைப்புக் குழு தொடங்கப்பட்டுள்ளது.தற்போது, நாகா்கோவில், கன்னியாகுமரி ஆகிய 2 இடங்களில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், தக்கலை, மாா்த்தாண்டம், குளச்சல் ஆகிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

விபத்துகள் குறைய வேண்டுமென்றால், அனைவருக்கும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்பட வேண்டும் என்றாா் அவா்.

கன்னியாகுமரி போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு ஆய்வாளா் செந்தில்வேலன் வரவேற்றாா். போக்குவரத்து உதவி ஆய்வாளா் சுமித் ஆல்ட்டின் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.