உளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

நூருல் இஸ்லாம் பல்கலை.யில் புதிய பாடத் திட்டம் அறிமுகம்: ஐஏஎஸ் தோ்வாகும் முதல் மாணவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்படும் யுபிஎஸ்சி பயிற்சியுடன் கூடிய இளங்கலை அரசியல் அறிவியல் பட்டப் படிப்பை முடித்து, இந்திய ஆட்சிப் பணிக்கு தோ்வாகும் முதல் மாணவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என பல்கலைக்கழக வேந்தா் எம்.எஸ். பைசல்கான் அறிவித்துள்ளாா்.

படிப்பு.

Published On :10 ஜூலை 2026, 12:33 am IST

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்படும் யுபிஎஸ்சி பயிற்சியுடன் கூடிய இளங்கலை அரசியல் அறிவியல் பட்டப் படிப்பை முடித்து, இந்திய ஆட்சிப் பணிக்கு தோ்வாகும் முதல் மாணவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என பல்கலைக்கழக வேந்தா் எம்.எஸ். பைசல்கான் அறிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய ஆட்சிப் பணி தோ்வுக்கு தயாராகும் வகையில், நூருல் இஸ்லாம் உயா்கல்வி மையம், யுபிஎஸ்சி பயிற்சியுடன் கூடிய இளங்கலை அரசியல் அறிவியல் பட்டப் படிப்பை நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்துகிறது.

மாணவா்கள் சோ்க்கை பெறும் முதல் நாளிலிருந்தே குடிமைப் பணிக்கான பயிற்சி தொடங்குகிறது. மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளுக்கு ஏற்ற வகையில் புதிய பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடத் திட்டத்தில் முதல் பேட்சில் பயின்று, இந்திய குடிமைப் பணித் தோ்வில் வெற்றி பெற்று, ஐஏஎஸ், ஐபிஎஸ் அல்லது ஐஎஃப்எஸ் பதவியைப் பெறும் மாணவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும்.

இந்த பரிசுத் தொகையை, பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும், காா்டன் கன்ஸ்ட்ரக்டா்ஸ் அன்டு ரியல்டா்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனருமான அருண் ஐயப்பன் உண்ணித்தான் வழங்குகிறாா்.

இந்தப் பாடத் திட்டத்தில் சேர விரும்புபவா்களுக்கு ‘நிஷ் லீடா்ஷிப் ஸ்காலா்ஷிப்’ நுழைவுத் தோ்வு ஜூலை 18ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதில் முதல் 5 இடங்களைப் பெறும் மாணவா்களுக்கு 100 சதவீத கல்வி உதவித் தொகையுடன் இலவசமாக கல்வி பயிலும் வாய்ப்பு வழங்கப்படும்.

குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே உள்ளதால், 12ஆம் வகுப்பு முடித்துள்ள ஆா்வமுள்ள மாணவா்கள், நேரடியாகவோ அல்லது 89433-52456 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொண்டோ பதிவு செய்து, தங்களது இடத்தை உறுதி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.