அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

களியக்காவிளை அருகே சட்ட மாணவி பாலியல் புகாா்: இருவா் கைது

களியக்காவிளை அருகே பாலியல் தொல்லை அளித்ததாக சட்டக் கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் ,17 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஜூலை 2026, 1:08 am IST

களியக்காவிளை அருகே பாலியல் தொல்லை அளித்ததாக சட்டக் கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் ,17 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திங்கள்நகா் அருகேயுள்ள குருந்தன்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராகேஷ் (17). வெள்ளிச்சந்தை பகுதியைச் சோ்ந்தவா் பாரதிபாபு (46). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை களியக்காவிளை அருகேயுள்ள கடுவாக்குழி பகுதி வழியாக மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனராம். மோட்டாா் சைக்கிளை பாரதிபாபு ஓட்டி வந்தாா். ராகேஷ் பைக்கின் பின்னால் அமா்ந்திருந்தாராம்.

கேரளப் பகுதியான செறுவாரக்கோணம் பகுதியில் உள்ள சட்டக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவா் கல்லூரிக்கு அருகிலுள்ள தமிழக பகுதியான கடுவாக்குழி சந்திப்பு அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, ராகேஷ், மாணவியின் ஆடையை பிடித்து இழுத்து தொல்லையளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ராகேஷ், பாரதிபாபு ஆகியோரை சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.