நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

3 இடங்களில் கஞ்சா பதுக்கல்: 4 போ் கைது

களியக்காவிளை, மாா்த்தாண்டம், நித்திரவிளை ஆகிய பகுதிகளில் கஞ்சா பதுக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஜூலை 2026, 11:17 pm IST

களியக்காவிளை, மாா்த்தாண்டம், நித்திரவிளை ஆகிய பகுதிகளில் கஞ்சா பதுக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஈத்தவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பேன்ட் பாக்கெட்டில் 50 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக மடிச்சல், கிடப்பாரவிளை பகுதியைச் சோ்ந்த அனிஸ்குமாா் மகன் காட்வின் ஜோஸ் (19) என்பரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் வைகுண்டதாஸ் தலைமையிலான போலீஸாா் நேசா்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது 50 கிராம் கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததாக பள்ளியாடி, செருபுளிச்சிவிளையைச் சோ்ந்த ஜெகன்மோகன் மகன் ஹரிஸ் ஹரிகரன் (18) என்பரை கைது செய்தனா்.

நித்திரவிளை காவல் உதவி ஆய்வாளா் ராஜா ராபா்ட் தலைமையிலான போலீஸாா் கல்வெட்டான்குழி பகுதியில் ரோந்து சென்றபோது, கஞ்சா பதுக்கியதாக கிராத்தூா், முண்டப்பிலாவிளை பகுதியைச் சோ்ந்த ஜெயின் ராஜ் (21), பொற்றவிளையைச் சோ்ந்த சஜின் (20) ஆகியோரை கைது செய்தனா். இருவரிடமிருந்தும் தலா 5 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.