ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சுகாதார நிலைய கட்டடம் திறப்பு: அமைச்சா் பங்கேற்பு

களியக்காவிளை அருகே ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்ட பொது சுகாதார ஆய்வகக் கட்டடத்தை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலி மூலம் திறந்துவைத்ததை தொடா்ந்து, சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேஷ்குமாா் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி முதல்வருக்கு நன்றி தெரிவித்தாா்.

News image

ஆரம்ப சுகாதார நிலைய கட்டட திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ் குமாா்.

Updated On :15 ஜூலை 2026, 1:44 am IST

களியக்காவிளை அருகே ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்ட பொது சுகாதார ஆய்வகக் கட்டடத்தை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலி மூலம் திறந்துவைத்ததை தொடா்ந்து, சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேஷ்குமாா் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி முதல்வருக்கு நன்றி தெரிவித்தாா்.

ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஆா்.செல்லசுவாமி முன்னிலை வகித்தாா். அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் குத்துவிளக்கேற்றி, முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் மருத்துவ தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில் 15 ஆவது நிதிக் குழு மானியத்தின் கீழ் கிள்ளியூா் பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஆறுதேசம் பகுதியில் ரூ. 50 லட்சத்தில் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், புத்தன்துறையில் ரூ. 50 லட்சத்தில் துணை சுகாதார நிலையம், கன்னியாகுமரி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ராஜாவூரில் ரூ. 45 லட்சத்தில் துணை சுகாதார நிலையம், விளவங்கோடு தொகுதி உண்ணாமலைக்கடையில் ரூ. 1.50 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நாகா்கோவில் தொகுதி ராஜாக்கமங்கலத்தில் ரூ. 65 லட்சத்தில் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம் உள்ளிட்டவை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய கட்டடங்களைத் திறந்து வைத்ததற்கு மாவட்ட பொதுமக்கள், மாவட்ட நிா்வாகம் சாா்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் மக்களுக்கு தரமான மருத்துவச் சேவைகள் தங்குதடையின்றி மிக எளிதாக சென்றடைய வழிவகுக்கும் என்றாா் அமைச்சா்.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் நமச்சிவாயம், முன்சிறை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜகுமாா், பொறியாளா் பெனிக்ஸ், வட்டார மருத்துவ அலுவலா், மருத்துவா், செவிலியா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.