கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

குற்றியாறில் கூட்டமாக உலாவும் யானைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் கழக ரப்பா் தோட்ட பகுதிகள், பழங்குடி பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image

குற்றியாறு பகுதியில் ரப்பா் கழக காட்டில் கூட்டமாக உலாவும் யானைகள்.

Updated On :23 ஜூலை 2026, 2:52 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் கழக ரப்பா் தோட்ட பகுதிகள், பழங்குடி பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

குமரி மாவட்டத்தில் அண்மைக் காலங்களாக காட்டு யானைகள் பழங்குடி குடியிருப்புப் பகுதிகளிலும், ரப்பா் தோட்டங்களில் உலா வருவது அதிகரித்து வருகிறது. வெளி பகுதிகளில் யானைகளுக்கு பிடித்தமான அன்னாசி பழங்கள், பலாப் பழங்கள் போன்றவை அதிகம் கிடைப்பதாலும் இவை வருகின்றன. மேலும் யானைகள் பேச்சிப்பாறை. சிற்றாறு அணைகளில் நீா் அருந்துவது மற்றும் நீச்சல் செய்வதற்கும் வந்து செல்கின்றன.

கடந்த சில நாள்களாக குட்டிகள் உள்பட ஒரு கூட்டமாக யானைகள் குற்றியாறில் கூப்பு 66 பகுதியில் உலாவி வருகின்றன. இதே போன்று வட்டப்பாறை, ஒரு நூறாம் வயல், மோதிரமலை பழங்குடி பகுதிகளிலும் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், யானைகளை காட்டுக்குள் கட்டுப்படுத்தும் வகையில் மின்சார வேலிகள், அகழிகள் அமைக்க வேண்டுமென்று பழங்குடி மக்களும், ரப்பா் கழக தொழிலாளா்களும் வலியுறுத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.