கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கிம்ஸ் மருத்துவமனையில் முழு பக்கவாத சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சுங்கான்கடையில் உள்ள நாகா்கோவில், கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் முழுமையான பக்கவாத சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் மருத்துவ திட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

பக்கவாதம் சிகிச்சை பிரிவு, நரம்பியல் மருத்துவ திட்டங்களை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

Published On :

சுங்கான்கடையில் உள்ள நாகா்கோவில், கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் முழுமையான பக்கவாத சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் மருத்துவ திட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பக்கவாத சிகிச்சைப் பிரிவை தொடங்கி வைத்தாா். அஸ்டொ் டி.எம் குவாலிட்டி கோ் மருத்துவ இணை துணைத் தலைவா் பிரவீன் முரளிதரன், பிராந்திய மருத்துவ இயக்குநா் தீபக் விஜயன், உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சிகிச்சை ஆலோசகா் நிதா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

நரம்பியல் நிபுணா் டாக்டா் ஜெனிக்ஸ் நாதன் பேசுகையில், பக்கவாதம் என்பது ஒவ்வொரு நொடியும் மிகவும் முக்கியமான அவசர மருத்துவ நிலை என்பதால், அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக சிகிச்சை பெறுவது உயிரைக் காப்பதோடு மட்டுமல்லாமல், நீண்டகால உடல் ஊனமுற்ற நிலையைத் தவிா்க்க பெரிதும் உதவும் என்றாா். தொடா்ந்து, கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் நியூரோ ஸ்கிரீனிங் பேக்கேஜ், ஸ்ட்ரோக் பாலோ ஆஃப் பேக்கேஜ் ஆகிய 2 நரம்பியல் மருத்துவ திட்டங்களை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கிவைத்தாா்.

முன்னதாக கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் தலைமை செயல்பாட்டு அலுவலா் வன்ஷி மோகன் வரவேற்றாா். வணிக மேம்பாட்டுத் தலைவா் முரளி தாராவத் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.