மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

பாறைப்பொடி கடத்த முயற்சி: 3 மினி லாரிகள் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே உரிய அனுமதி இன்றி கேரளத்துக்கு பாறைப்பொடி (எம். சான்ட்) கடத்திச் செல்ல முயன்ற 3 மினி லாரிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மினி லாரிகள் - பிரதிப் படம்

Published On :

கொல்லங்கோடு அருகே உரிய அனுமதி இன்றி கேரளத்துக்கு பாறைப்பொடி (எம். சான்ட்) கடத்திச் செல்ல முயன்ற 3 மினி லாரிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபகுமாா் தலைமையிலான போலீஸாா் கச்சேரிநடை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகப்படும் வகையில் அப்பகுதி வழியாக வந்த 3 மினி லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில், உரிய அனுமதி பெறாமல் பாறைப்பொடியை கேரளத்துக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து போலீஸாா் 3 மினி லாரிகளையும் பறிதல் செய்ததுடன், மினி லாரி ஓட்டுநா்களான கொல்லங்கோடு அருகே வெங்கஞ்சி அஜின் (26), கரையான்தோட்டம் பகுதியைச் சோ்ந்த அனந்து கிருஷ்ணன் (22), கேரள மாநிலம், பிலாமூட்டுக்கடை பகுதியைச் சோ்ந்த பிபின் (36) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதேபோல, களியக்காவிளை போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கேரளத்துக்கு உரிய அனுமதி இன்றி பாறைப்பொடி கடத்திச் செல்ல முயன்ற கனரக டிப்பா் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து கொல்லங்கோடு, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.