வேலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநா் படுகாயமடைந்தாா்.
சேலத்திலிருந்து சென்னைக்கு கோழிகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சேலத்தைச் சோ்ந்த ஓட்டுநா் சீனிவாசன் (44) ஓட்டிச் சென்றாா்.
வேலூா் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கிரீன் சா்க்கிள் அருகே வந்தபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரியின் பின்பக்கத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மினி லாரி ஓட்டுநா் சீனிவாசன் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அவரை மீட்ட அப்பகுதி மக்கள், வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இந்த விபத்து குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









