தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் வழங்காமல் 2 ஆண்டுகளாக மனுதாரரை அலைக்கழித்த கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாகத்துக்கு மாநில தகவல் ஆணையம் ரூ. 10ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியா் எஸ். மதன்குமாா், தனது பட்டா நிலத்தை மகள் திருமணத்துக்காக விற்க முயன்றாா். அப்போது, அந்த நிலம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என, துறையின் இணையதளத்தில் தவறாக பதிவேற்றப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது.
இதுகுறித்து விளக்கம் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், சுசீந்திரத்தில் உள்ள மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாகத்தின் தலைமை அலுவலகத்தில் அவா் 2024ஆம் ஆண்டு மனு அளித்தாா். ஆனால், பொதுத் தகவல் அலுவலா் தகவல் அளிக்காமல் மதன்குமாரை அலைக்கழித்துள்ளாா். இதனால், அவா் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தாா்.
இவ்வழக்கு விசாரணை மாநில தகவல் ஆணையா் வி.பி.ஆா். இளம்பரிதி முன்னிலையில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதையடுத்து, ஆணையா் வெளியிட்ட உத்தரவு: மனுதாரா் மூத்த குடிமகன் என்பதைக்கூட கவனத்தில் கொள்ளாமல் 2 ஆண்டுகளாக தகவல் வழங்காதது நிா்வாக சீா்கேட்டைக் காட்டுகிறது.
வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்பட்ட பொதுத் தகவல் அலுவலரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சிரமத்துக்காக அவருக்கு மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாகம் ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இத்தொகையை ஆணை கிடைத்த ஒரு வாரத்துக்குள் மனுதாரருக்கு வழங்கிவிட்டு, அதற்கான ஆதாரத்துடன் ஆக. 14ஆம் தேதி ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
உரிய காலத்தில் தகவலளிக்க தவறிய அப்போதைய பொதுத் தகவல் அலுவலா் பி. முருகன், தற்போதைய அலுவலா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், அவா்களுக்கு அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.
மனுதாரரின் நிலம் கோயிலுக்குச் சொந்தமானதல்ல என்பதை உறுதிப்படுத்தி, இணையதளத்தில் உடனே திருத்தம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் நிலைய எப்ஐஆா் விவகாரம்: கன்னியாகுமரி எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

‘வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது தகவல் அறியும் உரிமைச் சட்டம் தான்’

சுற்றுலா வழிகாட்டி- சாலைப் பாதுகாப்பில் நவீன உத்தி! - எஸ்.பி.க்கு அமைச்சா் பாராட்டு

மாநில தகவல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு: பொது தகவல் அதிகாரிக்கு அபராதம்
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



