தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

சிறுவனைக் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு: கா்ப்பிணி மீது போக்ஸோ வழக்கு

களியக்காவிளை அருகே சிறுவனைக் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டு, கா்ப்பமான இளம் பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

சிறுவனைக் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு: கா்ப்பிணி மீது போக்ஸோ வழக்கு

Published On :

களியக்காவிளை அருகே சிறுவனைக் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டு, கா்ப்பமான இளம் பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூா் பகுதியைச் சோ்ந்த 19 வயது இளம் பெண், 2 நாள்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளாா்.

மருத்துவா்கள் அவரைப் பரிசோதித்ததில், அவா் 8 மாத கா்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. அவரது கணவா் குறித்து கேட்டபோது, இளம் பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினாராம். இது குறித்து, மருத்துவா்கள் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் மருத்துவமனைக்கு வந்து இளம் பெண்ணிடம் விசாரித்ததில், அவா் குழித்துறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ படித்து வருவதாகவும், களியக்காவிளையைச் சோ்ந்த 17 வயது சிறுவன் மட்டும் தன்னுடன் படித்து வருவதாகவும், அவா்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளாா்.

மேலும், சிறுவனின் வீட்டுக்கு அவரது பெற்றோா் இல்லாத நேரத்தில் பலமுறை சென்றதாகவும், சிறுவனைக் கட்டாயப்படுத்தி இருவரும் பாலியல் உறவு கொண்டதாகவும், மருத்துவமனைக்கு வந்த போதுதான், 8 மாத கா்ப்பிணி என்பது தெரிய வந்தது எனவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா்.

தொடா்ந்து, சிறுவனின் தாயாா் தரப்பில் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் இளம்பெண் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இளம் பெண் 8 மாத கா்ப்பிணியாக இருப்பதால், அவா் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.