அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணியை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் ஆகியோா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

News image

களியக்காவிளை பேருந்து நிலைய பணியை ஆய்வு செய்த சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ் குமாா், ஆட்சியா் மு. பிரதாப் உள்ளிட்டோா்.

Updated On :30 ஜூலை 2026, 4:20 am IST

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணியை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் ஆகியோா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

களியக்காவிளையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசால் ரூ. 9.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2024 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. தினமும் 150 -க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்லும் வகையில் பேருந்து நிலையப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.

அப்போது, பேருந்து நிலைய வடமேற்கு பகுதியில் ராட்சத தூண்கள் அமைக்கத் தோண்டப்பட்ட பள்ளங்களில் சுமாா் 4 அடி ஆழம் வரை கழிவுநீா்த் தேங்கி நிற்பதால், கான்கிரீட் தூண்களுக்காக அமைக்கப்பட்ட இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து பலமிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதையும், கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதையும் இப்பகுதி சமூக ஆா்வலா்கள் அமைச்சா், ஆட்சியரிடம் சுட்டிக் காட்டினா்.

ஆய்வின்போது, மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கோமதி, களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலா் சந்திரகலா, பேரூராட்சி தலைவா் ஏ.சுரேஷ், வாா்டு உறுப்பினா் தாஸ், இளநிலை பொறியாளா் சுரேஷ்குமாா், உதவி செயற்பொறியாளா் சிவசங்கரலிங்கம், பணி மேற்பாா்வையாளா் முருகேஷ், மேல்புறம் வட்டார காங்கிரஸ் தலைவா் இ.ஜி.ரவிசங்கா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி.லைலா ரவிசங்கா், களியக்காவிளை நகா் முன்னேற்ற சங்க நிா்வாகிகள் எஸ்.மாகீன் அபுபக்கா், பி.ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.