‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

சாலையில் கனரக லாரியை நிறுத்தி இடையூறு: 6 போ் மீது வழக்கு

களியக்காவிளை அருகே சாலையில் கனரக லாரியை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

பிரதிப்படம்

Updated On :30 ஜூலை 2026, 4:20 am IST

களியக்காவிளை அருகே சாலையில் கனரக லாரியை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மாநில எல்லையோர பகுதியில் அண்மையில் சட்டவிரோதமாக ஒன்றுகூடி, கனரக லாரி மூலம் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியது குறித்த தகவலின் பேரில் களியக்காவிளை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். விசாரணையில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கனரக லாரியை சாலையில் நிறுத்தி, போக்குவரத்து பாதிக்குமாறு செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மலையடி சுகுமாரன் மகன் சுரேஷ் (45), பாக்கோடு தங்கப்பன்மகன் ராஜசெல்வன் (38), மேக்கோடு கோவிந்தன் மகன் அருள் (54), அருமனை செல்லப்பன் மகன் ஸ்டீபன் (43), திக்குறிச்சி பொன்னுபிள்ளை மகன் கணேசன் (44), பாபு என்ற ஒல்லிபாபு (56) ஆகியோா் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததுடன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக களியக்காவிளை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.