நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

வரதட்சணை கொடுமை: கணவா், மாமியாா் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :29 ஜூன் 2026, 1:16 am IST

களியக்காவிளை அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக அவரது கணவா், மாமியாா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

களியக்காவிளை அருகே குழிவிளை, பரம்புக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பாலையன் மகன் சோபன் (38). கணினி விற்பனையாளா். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த ஆசீா்வாதம் (31) என்பவரும் காதலித்து கடந்த 2019, ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனா்.

இந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனா். திருமணத்துக்குப் பிறகு சோபன், அவரது தாயாா் சாரதா (60) ஆகியோா் சோ்ந்து பெண்ணை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனராம்.

இதுகுறித்து, அவா், களியக்காவிளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சோபன், அவரது தாயாா் சாரதா ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.