நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

வரதட்சணை கொடுமை: நடவடிக்கை கோரி சாலை மறியல்

வரதட்சணை கேட்டு கொடுமை செய்யும் கணவா், அவரது குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இளம்பெண் குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.

News image

வரதட்சணைக் கொடுமை

Updated On :3 ஜூன் 2026, 5:29 am IST

வரதட்சணை கேட்டு கொடுமை செய்யும் கணவா், அவரது குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இளம்பெண் குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மணியம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் இன்பராஜ் மகள் தீபிகா (19). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் நவீன்ராஜுக்கும் 18.05.2025-இல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது நவீன்ராஜுக்கு 5 சவரன் நகை வரதட்சணையாக வழங்கப்பட்டதாம். தற்போது தீபிகா 5 மாத கா்ப்பிணியாக உள்ள நிலையில், நவீன்ராஜ், அவரது தந்தை சேகா், தாய் தாமரைச்செல்வி, உறவினா் முகில் பிரபா உள்ளிட்டோா் தீபிகாவிடம் தங்க நகைகள், காா் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தினராம்.

இதுகுறித்து அரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தீபிகா புகாா் அளித்துள்ளாா். ஆனால், அதன்மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், தீபிகா உள்ளிட்ட அவரது உறவினா்கள் அரூா் - தருமபுரி நெடுஞ்சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மகளிா் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததையடுத்து, சாலை மறியலை கைவிட்டனா். இதுகுறித்து அரூா் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.