முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

சாலை ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்

தினக்குடி-கோடாலிக் கருப்பூா் சாலையை ஆக்கிரமித்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

News image

தினக்குடி-கோடாலிக் கருப்பூா் சாலையை ஆக்கிரமித்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

Updated On :11 ஜூலை 2026, 1:22 am IST

அரியலூா் மாவட்டம், தினக்குடி-கோடாலிக் கருப்பூா் சாலையை ஆக்கிரமித்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினக்குடி கிராமத்தில் விவசாயிகளின் 100 ஏக்கா் தைல மரங்கள் மின்சார கம்பிகள் உரசியதில் அண்மையில் தீப்பற்றி எரிந்தது. இதையறிந்து தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்தபோது, சிலால்-அணைக்கரை சாலையில் வாகனங்கள் செல்லமுடியாத வகையில் ஆக்கிரமிப்புகள் இருந்ததையடுத்து, தீயை அணைக்க முடியாமல் சென்றனா். இதனால், தைலமரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

இதையடுத்து, சாலையின் இருப்புறமும் ஆக்கிரமிப்பை அகற்றி, ஆக்கிரமித்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை தினக்குடி முதல் கோடாலிக்கருப்பூா் வரை சாலையின் இருபுறமும் உள்ள தனிநபா் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியில் வருவாய் துறையினா் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த ஆக்கிரமிப்பாளா்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து வருவாய்த் துறையினா் அளவீடு செய்யும் பணியை நிறுத்தினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், ஆக்கிரமிப்பாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி சிலால்- அணைக்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்படனா்.

இதையறிந்த காவல் துறையினா், சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று, பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.