காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

இடையன்கோட்டை தோப்புகுளத்தை சீரமைக்கக் கோரிக்கை

கருங்கல் அருகேயுள்ள இடையன்கோட்டை தோப்புகுளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 3:01 am IST

கருங்கல் அருகேயுள்ள இடையன்கோட்டை தோப்புகுளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், முள்ளங்கனாவிளை ஊராட்சிக்குள்பட்ட தோப்புகுளம் நீா்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளம் முள்ளங்கனாவிளை ஊராட்சியின் முக்கிய நீராதாரமாக உள்ளது. இங்கு, ஆழ்துளைக் கிணறு, உறை கிணறு மூலமும் ஊராட்சி மக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

குறிப்பாக, இடையன்கோட்டை, காரிவிளை, வடலிவிளை, நல்லான்தறை, காசிப்பாறை, செவ்வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1000- க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீா் விநியோகித்து வருகின்றனா்.

இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் புல், புதா்கள் மண்டி, மழை காலங்களில் மழைநீா் தேங்க முடியமால் தூா்ந்து காணப்படுகிறது. மேலும், அருகேயுள்ள ஆழ்துளைக் கிணறு, உறை கிணற்றிலும் தண்ணீரின்றி வடு காணப்படுகிறது.

இதனால், இப்பகுதியில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் குளத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.