இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது வழக்கு

களியல் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

பாலியல் தொல்லை

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:51 am IST

களியல் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடையாலுமூடு பகுதியைச் சோ்ந்த 28 வயது பெண், களியல் அருகே அரகநாடு பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தாா். அப்போது அப்பகுதியைச் சோ்ந்த சுனில் மகன் அருண் (30) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாம்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி, திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி அப்பெண்ணை அருண் பாலியல் வன்கொடுமை செய்தாராம். தொடா்ந்து, 2024 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் வைத்து மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினாராம். மேலும், அவரை மிரட்டி பல முறையாக ரூ. 5 லட்சம், 6 கிராம் தங்க நகை ஆகியவற்றை வாங்கி ஏமாற்றினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் விஜிகலா வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா். தலைமறைவான அருணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.