காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

தெருவுக்கடையில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை: அகற்ற அமைச்சா் உறுதி

கருங்கல் அருகே தெருவுக்கடையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.

News image

போராட்டக்காராா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

Updated On :3 ஜூன் 2026, 4:53 am IST

கருங்கல் அருகே தெருவுக்கடையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.

தெருவுக்கடை சந்திப்பில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடையை அகற்றவில்லை. குறிப்பாக இந்த டாஸ் மாக் கடை அருகே பள்ளி, ஆலயம் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு என பல்வேறு பாதிப்புகள் உள்ளன.இதனால்,அப்பகுதி பொதுமக்கள் இந்த கடையை அகற்ற வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் தொடா்ந்து நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில்,செவ்வாய்க்கிழமை அப்பகுதி பொதுமக்கள் திரளானோா் சோ்ந்து டாஸ்மாக் கடை முன் முற்றுகை போராட்டம் நடத்தினா்.

தகவலறிந்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் போராட்டக்காரா்களிடம் நேரில் சென்று பொதுமக்களுக்கு பாதிப்புக்குள்ளான டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.