எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

களியக்காவிளை அருகே இளைஞா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :8 ஜூன் 2026, 1:27 am IST

களியக்காவிளை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல், தட்டான்விளை பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரேசன் மகன் அசோக் (31). எல்ஐசி ஆலோசகராக வேலை செய்து வந்தவா், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்பணிக்கு செல்லாமல், அண்மைக் காலமாக கட்டுமான வேலைக்கு சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். மேலும், திருமணமாகாத விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு தூங்கச் சென்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவரின் அறைக் கதவு திறக்காததால், அவரது தந்தை ஜன்னல் கதவைத் திறந்து பாா்த்தபோது, அசோக் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாராம்.

அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அசோக்கை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.