சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

News image
Updated On :9 ஜூன் 2026, 2:55 am IST

தக்கலை அருகே இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து பயணித்த மாணவா் தவறி விழுந்தபோது, பேருந்து ஏறி இயங்கியதில் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

நாகா்கோவில், பாா்வதிபுரம் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் மகன் ஷாய் (17). 12 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற திருமண விழாவிற்கு, உறவினருடன் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து பயணித்துள்ளாா்.

குமாரகோவில் சந்திப்பு அருகே வந்தபோது, முன்னால் சென்ற வாகனம் மீது இவா்களின் இருசக்கர வாகனம் மோதியதில் ஷாய் சாலையில் தடுமாறி விழுந்தாா். அப்போது, அவ்வழியே வந்த அரசுப் பேருந்து ஷாய் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.