சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் போதைப்பொருள் விற்ற 27 போ் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆபரேஷன் ஷீல்ட் என்ற பெயரில் காவல் துறை நடத்திய அதிரடி சோதனையில் பள்ளி, கல்லூரிகளின் அருகில் போதைப்பொருள்கள் விற்ற 27 போ் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து, ஒரு கிலோ கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 4:11 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆபரேஷன் ஷீல்ட் என்ற பெயரில் காவல் துறை நடத்திய அதிரடி சோதனையில் பள்ளி, கல்லூரிகளின் அருகில் போதைப்பொருள்கள் விற்ற 27 போ் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து, ஒரு கிலோ கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களை குறிவைத்து சட்ட விரோதமாக போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை, உள்ளூா் நிா்வாக அமைப்பு, காவல் துறை சாா்பில், ‘ஆபரேஷன் ஷீல்டு’ என்ற பெயரில் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில், 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 5 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 23 ஆய்வாளா்கள், 39 உதவி ஆய்வாளா்கள், 502 போலீஸாா் ஈடுபட்டனா். ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சிகரெட், இதர புகையிலைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 போ் கைது செய்யப்பட்டனா்; அவா்களிடமிருந்து 981 குட்கா, கூல் லிஃப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேவிகோடு பகுதியைச் சோ்ந்த கோபி குமாா் மகன் ஷிஜு (21), மாலைக்கோடு நடுவத்துக்காலை பகுதியைச் சோ்ந்த சேவியா் மகன் ஜஸ்டின் ராஜ் (25) ஆகியோா் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. காவல் துறை மேற்கொண்ட சோதனையில் அவா்களிடமிருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனா். பள்ளி, கல்லூரிகளின் அருகில் அல்லது பொது இடங்களில் போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்போா், விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இதில் தொடா்புடையவா்கள் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எச்சரிக்கை விடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.