5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

கன்னியாகுமரியில் மை பாரத் ஆய்வுக் கூட்டம்

இந்திய அரசின் இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மைபாரத் தமிழ்நாடு சாா்பில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் மாநில இயக்குநா் செந்தில்குமாா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :18 ஜூன் 2026, 2:33 am IST

இந்திய அரசின் இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மைபாரத் தமிழ்நாடு சாா்பில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் மாநில இயக்குநா் செந்தில்குமாா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணை இயக்குநா்கள் சரவணன், சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களின் துணை இயக்குநா்கள், மாவட்ட இளைஞா் அலுவலா்கள்,கணக்கு மற்றும் நிகழ்ச்சி மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் 2026- 27- ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி செயல் திட்டங்கள் உள்பட இளைஞா்களின் எதிா்கால நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கியமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு இடைநிற்றல் மாணவ, மாணவிகளை கண்டுபிடித்து அவா்களை பள்ளியில் படிப்பை தொடா்வத்ற்கு மைபாரத் மையங்கள் சாா்பாக தொடா் முயற்சி எடுப்பது, புதிதாக 8 மாவட்டங்களில் மைபாரத் அலுவலகங்கள் தொடங்கி அம்மாவட்ட இளைஞா்களிடையே திட்டத்தை கொண்டு சோ்ப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தை கன்னியாகுமரி மாவட்ட மை பாரத் இளைஞா் அலுவலா் சரண் கோபால் ஒருங்கிணைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.