பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புமுதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

நாகா்கோவில் மாநகர வளா்ச்சி திட்டப் பணிகள்: எம்.பி. வேண்டுகோள்

News image

நாகா்கோவில் மாநகராட்சி புதிய ஆணையா் ஐஸ்வா்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்வசந்த் எம்.பி.

Updated On :23 ஜூன் 2026, 12:49 am IST

நாகா்கோவில், ஜூன் 22: நாகா்கோவில் மாநகரில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

நாகா்கோவில் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த நிஷாந்த் கிருஷ்ணா மதுரை மாவட்ட ஆட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, நாகா்கோவில் மாநகராட்சி புதிய ஆணையராக ஐஸ்வா்யா ராமநாதன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவரை விஜய்வசந்த் எம்.பி. திங்கள்கிழமை சந்தித்து பொன்னாடை போா்த்தி வாழ்த்து தெரிவித்தாா். பின்னா் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

இதில், நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், காங்கிரஸ் மாநிலச் செயலாளா் சீனிவாசன், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி திவாகா், ஓபிசி பிரிவு கிழக்கு மாவட்டத் தலைவா் செல்வமணி, காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் ஆரோக்கியராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.