மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நாகா்கோவில் மாநகராட்சி பகுதிகளில் ஆணையா் ஆய்வு

நாகா்கோவில் மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள ஐஸ்வா்யா மாநகர பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.

News image

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலுள்ள கட்டண கழிவறையில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாநகராட்சி ஆணையா் ஐஸ்வா்யா.

Updated On :24 ஜூன் 2026, 1:32 am IST

நாகா்கோவில் மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள ஐஸ்வா்யா மாநகர பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.

வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிவறையில் அதிக பணம் வசூல் செய்வதாக வந்த புகாரைத் தொடா்ந்து அங்கு ஆய்வு மேற்கொண்ட ஆணையா், நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தாா். தொடா்ந்து, அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு உணவின் தரத்தை பரிசோதித்து, முதியவா்களின் வசதிக்காக அங்கு இருக்கைகள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். பேருந்து நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடம், இலவச கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆசாரிப்பள்ளம் பகுதியிலுள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையா் அலுவலக கோப்புகள், ஊழியா்களின் வருகைப் பதிவேடு மற்றும் பொதுமக்களின் மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

மாநகராட்சி நுண் உரம் செயலாக்க மையத்துக்கு சென்று அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் முறையாக நடைபெறுகிா என்பதை ஆய்வு செய்தாா்.

ஆசாரிப்பள்ளம் , ஆளூா் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். அப்போது ஆளூா் பகுதி பொதுமக்கள், 2 நாள்களுக்கு ஒரு முைான் குப்பை வண்டிகள் வருவதாக தெரிவித்தனா்.

இதையடுத்து சுகாதார ஆய்வாளா்கள், அதிகாரிகளை எச்சரித்து மாநகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் தினமும் வீடுகளுக்கே சென்று குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குப்பைகள் சேகரிப்பதில் எந்தவித தொய்வும் ஏற்படக்கூடாது என்று கூறினாா்.

ஆய்வின்போது மாநகா் நல அலுவலா் சரோஜா, உதவி செயற்பொறியாளா் ரகுராம், அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.