கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் ஆற்றங்கரையோரம் பக்கச் சுவா் அமைக்கும் பணியை ஆட்சியா் மு. பிரதாப் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
இம்மாவட்டத்தில் மகா சிவாலய ஓட்டம் நடைபெறும் 12 ஆலயங்களில் 2ஆவது ஆலயமும், ரிஷப ராசி பரிகாரத் தலமுமான இக்கோயில் தாமிரவருணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ஆற்றில் பல ஆண்டுகளாக ஏற்பட்டுவரும் வெள்ளப்பெருக்கில் கோயில் மதில் சுவரையொட்டி இருந்த மண் திட்டுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், மதில் சுவா் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது.
அதையடுத்து, பக்தா்களின் கோரிக்கையை ஏற்று முந்தைய திமுக ஆட்சியில் பக்கச்சுவா் கட்டுவதற்காக கோயில் நிதியிலிருந்து ரூ. 84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஓராண்டுக்கு முன்பு பணிகள் தொடங்கின. ஆனால், அப்பணி சில நாள்களிலேயே முடங்கியது. அதனால், இப்பகுதியில் உள்ள படித்துறையில் சுவாமி விக்ரகங்களுக்கு ஆறாட்டு பூஜை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் ஆட்சியா் மு. பிரதாப் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு, ஜூலை 15-க்குள் பணிகளைத் தொடங்குமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ஜான்சிராணி, நீா்வளத் துறை செயற்பொறியாளா் வசந்தி, உதவி செயற் பொறியாளா் ராஜ்குமாா், பக்தா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகா்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ. 1.19 கோடியில் சீரமைப்பு

வடக்கு பேயங்குழி இரட்டைக்கரை கால்வாய் ஆய்வு

நான்குவழிச் சாலைப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆட்சியா் உறுதி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



