வீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுகோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

சூறைக்காற்று: சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்பிடிக்கத் தடை

கன்னியாகுமரி கடல் பகுதியில் சூறைக்காற்று காரணமாக சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Published On :1 ஜூலை 2026, 4:20 am IST

கன்னியாகுமரி கடல் பகுதியில் சூறைக்காற்று காரணமாக சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமாா் 350 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடை காலம் முடிவடைந்த நிலையில் இம்மாதம் 15 ஆம் தேதி முதல் சின்னமுட்டம் மீனவா்கள் மீன்பிடிக்க செல்கின்றனா்.

இந்நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்வதை தவிா்க்குமாறு வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத்தொடா்ந்து, மீன்வளத்துறை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீனவா்களுக்கு அனுமதி மறுத்தது. இதனையடுத்து சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்குச் செல்லும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்தில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.