டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நாளை குமரி வரும் துணை முதல்வரை வரவேற்க அழைப்பு

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) வரும் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2026, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) வரும் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் வெளியிட்டுள்ளஅறிக்கை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு மாா்ச் 6ஆம் தேதி மாலை 4 மணிக்கு நாகா்கோவில், வடசேரி அண்ணா சிலை அருகே எனது தலைமையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

மாலை 5 மணிக்கு குலசேகரம் பகுதியில் மினி விளையாட்டு அரங்கம் திறப்பு, 6 மணிக்கு குளச்சல் பகுதியில் கலைஞா் நூலகம் திறப்பு, 7 மணிக்கு இறச்சகுளம் பகுதியில் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் அமைக்கப்பட்ட அம்பேத்கரின் முழு உருவச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகளில் துணை முதல்வா் கலந்து கொள்கிறாா்.

இந்நிகழ்ச்சிகளில் கிழக்கு மாவட்டத்துக்குள்பட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூா், வட்ட, கிளைச் செயலா்கள், நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சாா்பு அணி நிா்வாகிகள், உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.