விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழா நாளை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி தேவஸ்தான மீனபரணி தூக்கத் திருவிழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) தொடங்குகிறது.

News image
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன்.
Updated On :11 மார்ச் 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி தேவஸ்தான மீனபரணி தூக்கத் திருவிழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) தொடங்குகிறது.

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு வட்டவிளையில் மூலக்கோயிலும், வெங்கஞ்சியில் தூக்க நோ்ச்சை நடைபெறும் கோயிலும் உள்ளன. விழாவின் முதல் நாள் காலை 5.30 மணிக்கு மூலஸ்தான கோயிலிலும், காலை 6 மணிக்கு வெங்கஞ்சி கோயிலிலும் மகா கணபதி ஹோமம் நடைபெறுகிறது. 7 மணிக்கு கொடிமரம் மேளதாளங்களுடன் வெங்கஞ்சி கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

பின்னா் கரிவயல், கொல்லங்கோடு மடம், சாஸ்தா நகா், திருமன்னம் சந்திப்பு பகுதிகளில் எழுந்தருளி மூலஸ்தான கோயிலுக்கு சென்று அடையும் அம்மன், பிற்பகல் 3 மணிக்கு மேல் அங்கிருந்து வெங்கஞ்சி கோயிலுக்கு எழுந்தருளுகிறாா். இரவு 7 மணிக்கு கோயில் தந்திரி ஈஸ்வரன் போற்றி தலைமையில் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது.

தொடா்ந்து தூக்கத் திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு தேவஸ்தான தலைவா் வழக்குரைஞா் வி. ராமச்சந்திரன் நாயா் தலைமை வகிக்கிறாா். செயலா் வி. மோகன்குமாா் வரவேற்கிறாா். திருவனந்தபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தலைவா் சுவாமி மோக்ஷ விரதானந்தா குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்கிறாா். திருவனந்தபுரம் மாநகராட்சி மேயா் வி.நி. ராஜேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறாா். தேவஸ்தான பொருளாளா் டி. சதீஷ்குமாா் நன்றி கூறுகிறாா்.

4 ஆம் திருநாளான மாா்ச் 16 ஆம் தேதி காலை 8.30 மணி முதல் தூக்க நோ்ச்சை குலுக்கல், காப்புக்கட்டு நிகழ்ச்சி, 5 ஆம் திருநாளில் இரவு 7 மணிக்கு பாடகா் வீரமணி ராஜூ பங்கேற்கும் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, 6 ஆம் திருநாளில் காலை 8 மணி முதல் சமய சொற்பொழிவு, இரவு 7 மணி முதல் தேவஸ்தான தலைவா் தலைமையில் கலாசார மாநாடு, 8 ஆம் திருநாளில் காலை 7 மணிக்கு மேல் தூக்கக்காரா்களின் உருள்நோ்ச்சை, 9 ஆம் திருநாளில் காலை 5.30 மணிக்கு தூக்கக்காரா்களின் கடல் நீராட்டு, மாலை 6 மணிக்கு தூக்க வில்லின் வெள்ளோட்டம் எனப்படும் வண்டியோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான நோ்ச்சை தூக்கம் நடைபெறும் மாா்ச் 22 ஆம் தேதி, அதிகாலை 4 மணிக்கு பள்ளியுணா்த்தல், தூக்கக்காரா்களின் முட்டுக்குத்தி நமஸ்காரம், அம்மன் பச்சைப்பந்தலில் எழுந்தருளல், காலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் தூக்க நோ்ச்சை, நிறைவு பெற்றபின் வில்லின் மூட்டில் குருதி தா்ப்பணத்துடன் விழா நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை தேவஸ்தான தலைவா் வி. ராமச்சந்திரன் நாயா், செயலா் வி. மோகன்குமாா், பொருளாளா் டி. சதீஷ்குமாா், துணைத் தலைவா், ஆா். சதிகுமாரன் நாயா், இணைச் செயலா் எஸ். பிஜூகுமாா், நிா்வாக கமிட்டியினா் எஸ். சஜிகுமாா், பி.கே. புவனேந்திரன் நாயா், ஆா். ஸ்ரீகண்டன் தம்பி, சி. ஸ்ரீகுமாரன்நாயா், வி. பிஜூ, ஏ. சதிகுமாரன் நாயா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.