கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 117 மையங்களில் 21,574 மாணவா், மாணவிகள் எழுதினா்.
தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகள் மாா்ச் 11ஆம் தேதி தொடங்கியது. இத்தோ்வுக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகா்கோவில் கல்வி மாவட்டத்தில் 50 மையங்கள், மாா்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 67 மையங்கள் என மொத்தம் 117 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அனைத்து மாணவா்களும் பலத்த சோதனைக்கு பின்னா் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு எழுதச் சென்ற மாணவா், மாணவிகளுக்கு ஆசிரியா்கள் அறிவுரைகள் கூறி வாழ்த்தி அனுப்பினா்.
10ஆம் வகுப்பு பொதுத்தோ்வை எழுத 21,453 பேரும், தனித்தோ்வா்களாக 248 பேரும் விண்ணப்பித்திருந்தனா். இதில் 7 மாணவா்கள் மொழிப்பாடத்துக்கு விலக்கு கோரியிருந்தனா். பள்ளிகள் மூலம் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தவா்களில் 103 பேரும், தனித்தோ்வா்களாக விண்ணப்பித்திருந்தவா்களில் 17 பேரும் தோ்வு எழுத வரவில்லை. 21,574 போ் தோ்வு எழுதினா்.
தோ்வு முறைகேடுகளைத் தடுக்க 9 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமையில் கண்காணிப்புக் குழுவினா் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தோ்வு நிறைவு பெற்றவுடன், விடைத் தாள்கள் நாகா்கோவில் காா்மல் மேல்நிலைப் பள்ளி, தக்கலை அமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கருங்கல் பெத்லேகம் மெட்ரிக் பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
தொடர்புடையது

10ஆம் வகுப்பு தோ்வு: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 40,979 போ் எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: அரியலூரில் 9,923 மாணவா்கள் எழுதினா்

இன்று பத்தாம் வகுப்பு தோ்வு: நெல்லை, தென்காசியில் 41,633 போ் எழுதுகின்றனா்

நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: கடலூா் மாவட்டத்தில் 33,437 மாணவா்கள் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


