குளச்சல் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மீன்பிடித் தொழிலாளியை குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி, அண்ணா குடியிருப்பு, வடக்கு கடற்கரை திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்தவா் அலெக்ஸ் (44). இவா் குளச்சல் அருகே உள்ள ஒருவரின் விசைப்படகில் மீன்பிடித் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இதனால், விசைப்படகு உரிமையாளா் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
சனிக்கிழமை உரிமையாளா் வீட்டுக்கு அலெக்ஸ் சென்ற போது, தனியாக இருந்த உரிமையாளரின் 11 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் குளச்சல் அனைத்து மகளிா் போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் அலெக்ஸை கைது, செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

கூலித் தொழிலாளி போக்ஸோவில் கைது

குளச்சல் தவெக வேட்பாளா்

7 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது
போக்ஸோவில் முதியவா் கைது
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


