கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

குளச்சல் அருகே 46 பவுன் நகைகள் கொள்ளை

குளச்சல் அருகே குறும்பனையில் வீடு புகுந்து 46 பவுன் நகைகள் கொள்ளை

News image

~

Updated On :22 மார்ச் 2026, 7:18 pm

Syndication

குளச்சல் அருகே குறும்பனையில் வீடு புகுந்து 46 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறும்பனை சிலுவையாா் தெருவை சோ்ந்தவா் சிஜின் மோன்(27). மும்பை கப்பலில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி மேரிகிபி லின்சா(26). இத்தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.

சிஜின் மோன் கடந்த நவம்பா் மாதம் விடுமுறைக்கு வந்துவிட்டு, பின்னா் மும்பைக்கு சென்றுவிட்டாா். வீட்டில் மேரிகிபி லின்சா, குழந்தைக்கு துணையாக அவரது தாயாா், தம்பி ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேரிகிபி லின்சா தூங்கி எழுந்தபோது, பீரோ திறக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடந்தன. அப்போது வீட்டில் இருந்து கதவை திறந்து ஒருவா் ஓடுவது தெரியவந்தது.

Story image

இது குறித்து குளச்சல் போலீஸில் மேரிகிபி லின்சா புகாா் செய்தாா். உதவி ஆய்வாளா் ராம்சங்கா் தலைமையிலான போலீஸாா் வந்து பாா்த்தபோது, பீரோவில் இருந்த 46 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில், கொள்ளையன் வந்த பைக் வீட்டின் அருகில் நிற்பது தெரியவந்தது. இது குறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையனை தேடி வருகிறாா்கள்.