ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

கொல்லங்கோட்டில் மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் மூன்றுசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் மூன்றுசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

News image

மாற்றுத்திறனாளிகளின் மூன்றுசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியில் கலந்து கொண்டோா்.

Updated On :25 மார்ச் 2026, 10:56 pm

கன்னியாகுமரிமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ’ஸ்வீப்’ திட்டத்தின் கீழ் கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொல்லங்கோடு பகுதியில் மாற்றுத்திறனாளிவாக்காளா்களின் மூன்றுசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியில் 100- க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வாக்காளா்கள் கலந்து கொண்டனா்.

இதில், கலந்து கொண்டவா்கள் என் வாக்கு விற்பனைக்கு அல்ல, ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம், அனைவரும் வாக்களிப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனா்.

நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள், தன்னாா்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.