ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பத்மநாபபுரம் தொகுதியை மீண்டும் திமுகவுக்கு ஒதுக்க வேண்டும்! திமுக நிா்வாகிகள் ஆா்ப்பாட்டம்!

News image

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி திமுக அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

Updated On :29 மார்ச் 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

பத்மநாபுரம் பேரவைத் தொகுதியை மீண்டும் திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென்று திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக கூட்டணியில் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, இத்தொகுதியில் கடந்த 2 சட்டப் பேரவைத் தோ்தல்களில் வெற்றி பெற்று தமிழக பால்வளத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜூக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக குமரி மேற்கு மாவட்ட நிா்வாகிகளில் பலா் அழகியமண்டபத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆலோசனைக் கூட்டம் நடத்தினா். இதில் மாவட்ட துணைச் செயலாளா் ராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினா் டேவிட் ராஜபோஸ், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் திலிப்குமாா், அலாவுதீன், கிறிஸ்டல் பிரேமகுமாரி, என்.ஆா் மணி, கோமதி, தனிஸ்லாஸ், நகரச் செயலா்கள் சுபிகான், வினுகுமாா், ரமேஷ், ஒன்றியச் செயலா்கள் கோபால், ஜான்சன், டி.பி ராஜன், றாபி, ஷைனி காா்டன், மாஸ்டா் மோகன், அருளானந்த ஜாா்ஜ், பேரூா் செயலா்கள் சோழராஜன், செல்வகுமாா் உட்பட 20 பேரூா் செயலா்கள், பேரூராட்சி தலைவா்கள் பெனிலா ரமேஷ், பினா அமிா்தராஜ் முன்னாள் ஊராட்சி தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்கி மனோ தங்கராஜை வேட்பாளராக அறிவிக்க திமுக தலைமை பரிசிலனை செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவா்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி, அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.