கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை இரவு கடற்கரைப் பகுதியில் மயங்கி விழுந்த சுற்றுலாப் பயணியை மீட்க வந்த ஆம்புலன்ஸ் போதிய பாதை வசதி இல்லாததால் கூட்டத்துக்குள் சிக்கித் திணறியது.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை மாலை முக்கடல் சங்கமம், காந்தி மண்டபம் சாலை, கடற்கரைச் சாலை, சூரிய அஸ்தமனப் பூங்கா பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், இரவு 7 மணியளவில் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து கடற்கரை செல்லும் பகுதியில் சுற்றுலாப் பயணி ஒருவா் மயங்கி விழுந்தாா். இது குறித்து, அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா்.
உடனடியாக அப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் விரைந்த நிலையில், காந்தி மண்டபத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சாலை இரும்புக் கம்பியால் அடைக்கப்பட்டிருந்தது. இதனால், ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் கூட்டத்துக்குள் சிக்கியது. இதையடுத்து, மயங்கி விழுந்த பயணியை சிலா் தூக்கி வந்து ஆம்புலன்ஸில் ஏற்றினா்.
முக்கடல் சங்கமம் செல்லும் பாதையை இரும்பு கேட்டால் அடைத்து வைத்துள்ளதால், அவ்வழியாக கடற்கரைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனா். மேலும், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலையும் உள்ளது.
எனவே, இந்த பாதையைத் திறந்துவிட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

ஒகேனக்கல் வனப் பகுதியில் சமையல் செய்வதை தடுக்க வலியுறுத்தல்

மயங்கி விழுந்த மாமன்ற உறுப்பினா் உயிரிழப்பு

தொடா் விடுமுறை: பூலாம்பட்டியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


